si_uni  ta_uni
Sinhala (Sri Lanka)English (United Kingdom)
e_service_icon_si

செய்திகளும் நிகழ்ச்சிகளும்

Latest News Latest News There are no translations available.   Latest news

முக்கியமான இணையதளங்கள்

gov_ta இலங்கை அரசாங்க இணையத்தளம்
gov_ta சமய விவகார அமைச்சு
gov_ta வெளிநாட்டு விவகார அமைச்சு
gov_ta தென்னைப் பயிர்ச் செய்கை சபை
gov_ta வெளிநாட்டு வேலைவாய்ப்பு செயலகம்
gov_ta Board of Investment
gov_ta பௌத்த சாசன அமைச்ச
செவ்வாய்க்கிழமை, 01 பெப்ரவரி 2011 14:29

பொது நம்பிக்கைப் பொறுப்பாளர் திணைக்களத்திற்கு நாம் உங்களை வரவேற்கின்றோம். பொது நம்பிக்கைப் பொறுப்பாளர் திணைக்களம் ஆனது 1930 நவம்பர் 22ஆம் திகதி நிறுவப்பட்டது. திணைக்களமானது அதனது செயற்பாடுகளை 1931 ஆம் ஆண்டு 06 பணியாளர்களுடன் ஆரம்பித்தது. பணியாளர் குழாமானது பொது நம்பிக்கைப் பொறுப்பாளி, இரு வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட அதிகாரிகள், ஒரு எழுதுவினைஞர் அதிகாரி, இரு காரியாலய உதவியாளர்கள் என்போரைக் கொண்டிருந்தது. ஆனாலும் இந் நிர்வாகத்தின் கீழே 54 தோட்டங்களும், நம்பிக்கைப் பொறுப்புக்களும் வந்து சேர்ந்தன.. இது சிறியதாக இருந்தாலும் நம்பிக்கைப் பொறுப்பாளிகள் தோட்டங்களின் வசம் பெருந்தொகையிலான செல்வம் இருந்தது. அன்றிலிருந்து இற்றைவரைக்கும் நாட்டில் வாழ்ந்த செல்வந்தர்கள் தமது செல்வத்தை இத் திணைக்களத்திடம் இன மத சாதி வேறுபாடின்றி தர்மச் செயல்களில் செலவழிக்க ஒப்புவித்தனர்.

அநாகரிக தர்மபால, D.B ஜெயதிலக்க, A.A டி அல்விஸ், முதலியார் ஜயவிக்கிரம, லெனாட் ரூபசிங்க, சந்திரசேகர ஐயா, முதலியார் சில்வா விஜயசிங்க, ஜோசவ் கோல்க் போன்ற பொது உணர்வுடைய பெயர்போன தனிநபர்கள் இருந்தனர்.

1922 ஆம் ஆண்டு முதலாம் இலக்க பொது நம்பிக்கைப் பொறுப்பு கட்டளைச் சட்டத்தினால் பொது நம்பிக்கைப் பொறுப்பு ஆனது உருவாக்கப்பட்டு ஒரு நிறுவனமாக ஒருங்கிணைக்கப்பட்டது. சட்டமானது இலங்கையின் நம்பிக்கைப் பொறுப்பாளர் என அறியப்பட்ட அதிகாரி இடைவிடாது தொடர்ச்சியாக இருப்பதற்கு வழிசெய்கிறது. அப் பொறுப்பில் உள்ளவரின் பொறுப்பு வெற்றிடமாகும் பட்சத்தில் உத்தியோகபூர்வ சொத்தானது பின்வருபவருக்கு கடத்தப்படுகிறது. இதன் பிரகாரம் இருப்பவரும் தொடர்ந்து வருபவரும் ஒன்று என்ற நிலையில் தொடர்ந்து வருபவரால் கடமைகள் தொடர்ந்து ஆற்றப்படுகிறது.

திங்கட்கிழமை, 13 ஜூன் 2011 06:11 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது